ஞாயிறு, 8 ஜூலை, 2012

"எழுதுவதெல்லாம் பொன்னல்ல ....."- தொடர் - 3

அந்த பொக்கிஷம் " கணையாழி " இதழ் . ஜனரஞ்சக எழுத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டு  உண்மையான அல்லது  நிஜத்தை -யதார்த்தத்தை காட்டும் எழுத்தை எனக்கு அந்த கணையாழி இதழ் காட்டியது. உடனே மேலும்  சில இதழ்களை  தேடி எடுத்து  அப்போது கணையாழியின் விலை மூன்று ரூபாய் . பழைய விலைக்கு  ஒருரூபாய்க்கு கிடைத்தது . அதன் பிறகு மாதம் தவறாமல்  விஜய பதிப்பகம் செல்ல ஆரம்பித்தேன் -கணையாழி க்காக . இப்படியாக அங்கு தொடர்ந்து சென்றதில் காலச்சுவடு  முதல் இன்ன பிற இலக்கிய இதழ்களையெல்லாம் வங்க ஆரம்பித்து  நுனிப்புல் வாசக ரசனையிலிருந்து  மேம்பட்டு ஒரு இலக்கிய வாசகனாக  என்னை மாற்றிக்கொண்டேன்.
 
        அந்த கணையாழியை படித்து விட்டு இன்று வரும் கணையாழியை பார்த்தால் பற்றிக்கொண்டு வருகிறது . அது ஒரு நிலா காலம் ......" எப்புடியிருந்த நான் உப்பிடியாயிட்டேன் .." காமெடிதான் ஞாபகத்துக்கு வருகிறது . அன்று  அவ்வளவு  காத்திரமாக வந்த கணையாழி இப்போது இன்னும் உன்னதமாக அல்லவா வரவேண்டும்....? ஒரு சுரத்தே இல்லாமல் ,ஊறுகாய் இல்லாத - உப்பில்லாத தயிறு சோறு போல...சப்பென்று  இருக்கிறது இன்றைய கணையாழி ! அதனை தமிழ் இலக்கியக்காரர்களையும்  மிக  ஈர்த்த ஒரு இதழ் இப்போது கவனம் இல்லாமல் வருவது வருத்தத்தை தருகிறது.  அன்றைய கணையாழி தான்  என்னை  எல்லோருக்கும் அறிமுகப்படுத்தியது - அறியச்செய்தது. என்னுடைய   முதல்  இலக்கிய சிறுகதை " நடப்புகள் " ,முதல் குறு நாவல் " வேதாளமும் முருங்கை மரமும் " எல்லாம் கணையாழியில் தான் வந்தது . சுஜாதாவின் கடைசிப்பக்கங்கள் .......ஆஹா ......!
             அந்த கணையாழியின் இடத்தை நிரப்ப முடியாதது போலவே எத்தனையோ இலக்கிய சிற்றிதழ்கள் , நடுவாந்திர இதழ்கள் வந்தும் கூட இன்னும்  கோமல் சுவாமிநாதன்  அவர்களின்   "சுபமங்களா"  இதழின் இடத்தை நிரப்ப முடியவில்லை !
அனைவருக்குமான  ஒரு தேர்ந்த உன்னத இதழ் அது .
                                                     ( தொடரும் ....)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக