வெள்ளி, 24 ஜனவரி, 2014

சென்னை புத்தகத் திருவிழா 2014 ...சில குறிப்புகள் ..
 

 இந்த 37 வது சென்னை புத்தக கண்காட்சி மிக சிறப்பாக நடந்து  முடிந்துள்ளது .சென்ற ஆண்டை விட  மிக கூட்டம். விற்பனையும் அதிகம் .
 சமையல் ,சோதிடம் , வாஸ்து , கோலம் போடுவது எப்படி ..?
    15 நாளில் எதையும் சாதிக்கலாம்...,மீன் பிடிப்பது எப்படி ..?
     சாப்பிடுவது எப்படி.. ?  போன்ற புத்தகங்களிலிருந்து கொஞ்சம் விடு பட்டு
    நல்ல இலக்கியங்களை படிக்க மக்கள் ஆர்வம் காட்டியிருக்கிறார்கள் .

 சுற்றுச்சூழல் இயற்கை காட்டுயிர்கள் சார்ந்து நூல்கள்  நிறைய வந்ததும்  மக்கள்  ஆர்வமுடன் வாங்கியதும்  சந்தோஷமான விஷயம் .

   இனி சில  யோசனைகள்  வரும் 2015  ஆண்டில்
புத்தக கண்காட்சியை ஒட்டி" பபாசி "- சார்பாக ஆண்டு தோறும் நாவல் போட்டி ஒன்று வைத்து சிறந்த மூன்று நாவல்களை தேர்ந்தெடுத்து ,
சென்னை புத்தகண்காட்சியில் அதை வெளியிட்டு
துவக்க நாளில் பரிசு வழங்கும் முறையை கொண்டுவர வேண்டும் .


# அதேபோல சிறுகதை தொகுப்பு நூல்களுக்கும் செய்யலாம் .

# எந்த குருப்பிலும் இல்லாமல் கவனம் பெறாமல் இருக்கும்  படைப்பாளிகளை அவர்களின்  படைப்புகளை கவனப்படுத்த வேண்டும் .
 

(ராயல்டி பிரச்சனை இப்போது பரபரப்பாக இருக்கிறது ....)
பெரும்பாலும் புதிய அல்லது பிரபலமில்லாதவர்களின் முதல் படைப்பை வெளியிடும்போது பதிப்பகங்கள் அந்த படைப்பாளியிடம் பணம் பெற்றுக் கொள்கின்றன . பொதுவான நடை முறை இது .
இங்கு படைப்பாளனும் தன் படைப்பு வெளிவந்தால் போதும் என்கிற மனநிலையில்தான் இருக்கிறான். பணம் ஒரு பொருட்டாக இருப்பதில்லை அவனுக்கு . இதை பதிப்பகங்கள் சாதகமாக பயன் படுத்திக்கொள்கின்றன . இந்நிலை மாற வேண்டும் ...
 

# நல்ல படைப்புடன் வரும் படைப்பாளியின் படைப்புகளை
பணம் பெறாமல் பதிப்பகங்கள் வெளியிடவேண்டும்-
வெளியிட முன் வரவேண்டும் .


# 300 முதல் 400 அரங்குகள் இருக்கும் போதும் 10 நாட்கள் இப்போது 700 அரங்குகளுக்கும் மேல் சென்னை புத்தகத் திரு விழா
விரிவடைந்து படைப்பாளிகள் -வாசகர்கள் - பார்வையாளர்கள்
என நாளும் மக்கள் திரளுகின்றனர்.
11 நாள் மட்டுமே என குறைந்த பட்ச கால அளவே இருப்பதால் பொங்கல் விடுமுறைக்கு பிறகு வர நினைப்பவர்களுக்கு வாய்ப்பு இல்லாமல் போகிறது .
இவ்வளவு பெரிய புத்தகத் திருவிழாவுக்கு இன்னும் என்ன 11 நாள் தான் நடத்துவது என்கிற கணக்கு...? 
எனவே வரும் ஆண்டிலிருந்து 20 நாட்கள் அல்லது குறைந்த பட்சம் 15 நாட்களாவது புத்தக கண்காட்சியை நடத்த பாபஸி ஆவண செய்ய வேண்டும் . 
# பழைய  நூல்களை குறைந்த விலைக்கு வெளியே வைத்து  விற்க  அனுமதிக்க வேண்டும் ..