ஞாயிறு, 27 மே, 2012

அன்புடன் ,
                முக நூலிலேயே  ( Face Book) எழுதிக்கொண்டு இருப்பதால்  பிளாக்கில்  எழுதுவது  பெரும்பாலும்  தடை ஏற்படுகிறது . வாரம் ஒரு முறையாவது  இனி ப்ளோகில் எழுதவேண்டும். ஒவ்வொரு முறையும்  இதை சொல்லிக்கொண்டும் , எழுதிக்கொண்டும்  அல்லது   நினைத்துக்கொண்டாவது  இருப்பது  ஒரு செயல் பாடாகிவிட்டது . அதே போலவேதான்  படைப்புகள்  எழுதுவதும். நேரம் இன்மை ஒரு பெரும் பிரச்சனையாக இருக்கிறது. கிடைக்கும்  கொஞ்ச நேரமும் பெரும்பாலும்  படிக்கவே  சரியாகி விடுகிறது. சிலருக்கு மட்டும் படிப்பதும் , எழுதுவதும் எப்போதுமே பெரும் அல்லது ஒரு பிரச்சனையே இல்லாமல் இருக்கிறது . அவர்களிடம்  இதைப்பற்றிக்கேட்டால் , அவர்கள்  மிக எளிமையாக  தினம் ஒரு பக்கமாவது  எழுதிவிடுவதை வழக்கமாக வைத்திருப்பதாக சொல்லுகிறார்கள். சுலபமாகத்தான்  இருக்கிறது. இந்த ஒரு பக்கம் எழுதுவது  கூட  எனக்கு சாத்தியப்படாமல் இருக்கிறது . தினம் ஒரு பக்கம் என்றாலே  வாரம்  ஒரு சிறுகதை , வருடம் 365 பக்கம்   என்றாகி  வருடத்துக்கு  ஒரு நாவல் எழுதிவிடலாம். ஆஹா ......! இப்படியே நினைத்து  நினைத்து சந்தோஷப்பட்டுக்கொண்டே ......இன்னும் எத்தனை காலத்துக்கு  என் முதல் நாவல் ...........     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக