ஞாயிறு, 8 ஜூலை, 2012

" சிந்தையள்ளும் சீன தேசம் "

"பாதுஷா'- என்கிற பெயரில் ரொம்ப காலமாக எழுதி வருபவர் கே.பி.எச் .முஹம்மது முஸ்தபா என்பது இப்போதுதான் எனக்கு தெரிய வருகிறது .

மிக்க  சந்தோசம் .
இவர் இப்போது " சிந்தையள்ளும் சீன தேசம் " என்ற ஒரு  சிறப்பான நூலை எழுதியுள்ளார் . சீனா என்றால் , உலகப் புகழ் சீனப்பெருஜ்சுவர் , அது ஒரு கம்யுனிஸ்ட் நாடு அப்புறம் அது ஒரு மூடுண்ட -எதையும் வெளி விடாத நாடு என்பது தான் நமக்குத்தெரியும் . எல்லாவற்றையும் விட அது நமக்கு எதிரி நாடு . (பொது புத்தியில் இப்படித்தானே ஏற்றி வைத்துள்ளார்கள் ..?..!.)
சீனாவில் பணி புரியும் அவருடைய மகன் திரு. பீர் அஹமது புகாரி அவர்களுடன் மூன்று மாதங்கள் தங்கச்சென்றதில்,ஒரு நூலையே எழுதும் அளவுக்கு மிக கூர்மையான அவதானம் கொண்டவராக இருக்கிறார் பாதுஷா அவர்கள் . வியப்புக்குரிய செயல் இது . மிக இயல்பான எளிய நடையில் நமக்கு தெரியாத சீனாவை காட்சிப்படுத்தியிருக்கிறார் .
மிகச்சிறப்பாக ஒரே வரியில் " சீனாவை இந்த புத்தகம் இசைக்கிறது .." என்று வண்ணதாசன் இந்த நூலைப்பற்றி தன் அணிந்துரையில் குறிப்பிட்டுள்ளார் . ஆம் வண்ணதாசன் சொன்னது மிக உண்மை என்பது நூலை படிக்கும் போது உணர்ந்தேன் .
" சீன தேசம் சென்றாவது கல்வியைத் தேடிக்கொள்ளுங்கள் .." என்பது நபிகள் நாயகத்தின் வாக்கு அல்லது பொன் மொழி .
1400ஆண்டுகளுக்கு முன் நபி(ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்தில் அரேபியர்கள் சீனா சென்றதாக எந்தவித வரலாற்றுக் குறிப்பும் இல்லை.அரேபியர்கள் சீனாவைப்பற்றி அறிந்திருக்கவும் வாய்ப்பில்லை . பின் எப்படி நபிகள் நாயகம் சீனாவைப்பற்றி இப்படி குறிப்பிட்டார்கள் ....?.அதுதான் அவர்களின் தீர்க்க தரிசனம் ...என்று வியப்புடன் இன்றைய சீனா குறித்த கட்டுரை ஆரம்பமாகிறது . 148பக்கங்களில் சீனாவின் வளர்ச்சி , அதன் பிரம்மிக்க வைக்கும் தொழில் வளம் ,நடப்புகள், மூட நம்பிக்கைகள் ,நேரம் தவறாமை என்று ஒவ்வொரு தலைப்பாக ஒட்டு மொத்த சீனாவை நமக்கு காட்டியுள்ளார் பாதுஷா அவர்கள் . சீனாவை இன்னொரு கோணத்தில் அறிய படிக்க வேண்டிய நூல் இது . பாதுஷா அவர்களுக்கு பாராட்டுகளும் ....நன்றியும் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக